வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்; 4 பேர் கைது

திருவள்ளூர் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்; 4 பேர் கைது;

Update:2017-03-20 03:00 IST

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனுக்கு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் நேற்று திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பாலு, சப்–இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் காக்களூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது காக்களூர் பூங்கா நகரில் ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் செய்வது போலீசாருக்கு தெரியவந்தது. அப்போது அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்த காக்களூர் பூங்காநகரை சேர்ந்த மகாலட்சுமி என்கிற சுதா (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா எண்டாத்தூரை சேர்ந்த முரளி (31), ஜெகன் (23), உத்திரமேரூரை அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த சபாபதி (23) ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கடலூர் மூர்த்தி குப்பத்தை சேர்ந்த 27 வயது பெண்ணை மீட்டு சென்னையில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கார் கைப்பற்றப்பட்டது.

மேலும் செய்திகள்