ஊத்துக்கோட்டையில் அஞ்சலக வங்கி சேவை தொடக்கம்

ஊத்துக்கோட்டை அஞ்சல் அதிகாரி ஆனந்தி சேவையை தொடங்கி வைத்தார்.;

Update: 2017-03-19 22:00 GMT

ஊத்துக்கோட்டை

வங்கிகளை போலவே பொதுமக்கள் அஞ்சல் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால் உடனடியாக ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏ.டி.எம். கார்டுக்கு சேவை வரியும் கிடையாது. இந்த அஞ்சலக வங்கி சேவை ஊத்துக்கோட்டையில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கி ஏ.டி.எம். கார்டை உடனடியாக பெற வாடிக்கையாளர்கள் ஆதார் கார்டு நகல், 2 போட்டோக்களை வழங்க வேண்டும். ஊத்துக்கோட்டையில் நடந்த இந்த சேவை தொடக்க விழாவுக்கு திருவள்ளூர் அஞ்சல் அலுவலக அதிகாரி பாபு தலைமை தாங்கினார்.

ஊத்துக்கோட்டை அஞ்சல் அதிகாரி ஆனந்தி சேவையை தொடங்கி வைத்தார். இதில் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்