ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொடூர கொலை
திருவாடானை அருகே ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ஒரு தலைக் காதல்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்கலக்குடி அருகேயுள்ள அடுத்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகேசுவரி. இவர்களுக்கு தர்மலிங்கம் (வயது 20) என்ற மகனும், தாரணி (19) என்ற மகளும் உள்ளனர்.
தாரணி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டில் இவர்களது உறவினரான சேதுராமன் என்பவருடைய மகன் குமார் (29), தனது அக்காள் பானுமதியுடன் வசித்து வந்துள்ளார். குமார் சென்னையில் தோல் பை தைக்கும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் ஒரு தலையாக தாரணியை, குமார் காதலித்து வந்தார். இதனால் அடிக்கடி சென்னையில் இருந்து அடுத்தகுடி கிராமத்துக்கு குமார் வந்து செல்வாராம்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குமார் தனது குடும்பத்தினர் மூலம் தாரணியை பெண் கேட்டுள்ளார். இதற்கு தாரணியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து சில தினங்களில் குமார், தாரணியிடம் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி தகராறு செய்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு திருவாடானை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று தாரணியின் தாய் மகேசுவரியும், அண்ணன் தர்மலிங்கமும் வெளியூர் சென்று விட்டனராம்.
நோட்டம்
நேற்று கல்லூரி விடுமுறைதினம் என்பதால் தாரணி தனது தோழியுடன் தேவகோட்டைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு மதியம் 1 மணிக்கு அடுத்தகுடிக்கு வந்த அவர் பக்கத்தில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து வீட்டின் பின்புற கதவை திறந்து வைத்து விட்டு தரையில் படுத்து அயர்ந்து தூங்கி உள்ளார்.
இதனை நோட்டமிட்ட குமார், தாரணியின் வீட்டிற்குள் நுழைந்து கதவை பூட்டிவிட்டு டி.வி.யின் ஒலியை கூட்டி வைத்துள்ளார். டி.வி. ஒலியில் தாரணி விழிப்பதற்குள் அருகில் சென்ற குமார் தான் கையில் வைத்து இருந்த அரிவாளால் தாரணியின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்துள்ளார். நீண்ட நேரம் டி.வி.யின் ஒலி குறையாமல் இருந்ததால் அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் சந்ததேகம் அடைந்து ஓடி வந்துபார்த்துள்ளனர்.
அங்கு கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் இருந்ததால் அவர்கள் கதவை திறக்க முயன்றுள்ளனர். நீண்ட நேரத்திற்குபின் கதவு தானாக திறந்துள்ளது. அப்போது குமார் கையில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தார். தாரணி கழுத்து அறுபட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தரையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சிஅடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்தநிலையில் குமார் அரிவாளை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள தன்னுடைய வீட்டிற்குள் சென்று கதவுகளை பூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கிராம மக்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து கிராம மக்கள் குமாரின் வீட்டு கதவை உடைத்து அவரை, பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது
இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். ஒரு தலை காதலால் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.