காட்டுமன்னார்கோவில் அருகே 7–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை குளத்தில் குளிக்க தாய் மறுத்ததால் விபரீத முடிவு

காட்டுமன்னார்கோவில் அருகே குளத்தில் குளிக்க தாய் மறுத்ததால் 7–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-03-19 22:45 GMT

காட்டுமன்னார்கோவில்,

தற்கொலை

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகள் லாவண்யா(வயது 12). இவள், குடிகாட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் லாவண்யா வீட்டில் இருந்தார்.

அப்போது தனது தாயிடம், தான் குளிப்பதற்காக அதே பகுதியில் உள்ள குளத்துக்கு செல்வதாக கூறினார். இதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்தார். இதனால் மனமுடைந்த லாவண்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்