ராசிபுரம் அருகே கார் கவிழ்ந்து 3 பேர் காயம்

நெல்லையை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (வயது 27).

Update: 2017-03-19 23:00 GMT

ராசிபுரம்,

நெல்லையை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (வயது 27). இவரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த மணிவண்ணனும்(28), பெங்களூரைச் சேர்ந்த சுமனும் (28) நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் 3 பேரும் பெங்களூரில் டிரைவர்களாக வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஜான்பீட்டர் பெங்களூரில் இருந்து காரில் அவரது உறவினர் ஒருவரை சிவகாசியில் விடுவதற்காக சென்றார். காரை அவரே ஓட்டினார். காரில் நண்பர்கள் மணிவண்ணன், சுமன் ஆகியோரும் உடன் சென்றனர். பின்னர் அவர்கள் சிவகாசியில் இருந்து பெங்களூருக்கு அதே காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலை சேலம்–நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட் மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரியின் பின்புறத்தில் கார் திடீரென மோதி நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்து சேதமானது. இதில் காரில் பயணம் செய்த ஜான்பீட்டர், மணிவண்ணன், சுமன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். விபத்து பற்றி ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்