பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும்
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலத்தை அடுத்த பொம்மஅள்ளி ஊராட்சியில் அண்ணா நகர் முதல் பாண்டியன் கொட்டாய் வரை ரூ.17 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கப்படுகிறது. இதேபோன்று பாலக்கோடு ஒன்றியம் கும்மனூர் ஊராட்சி காடுசெட்டிப்பட்டி முதல் வேடம்பட்டி வரை ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், பஞ்சப்பள்ளி ஊராட்சி கொக்கிக்கல் கிராமத்தில் ரூ.26 லட்சம் மதிப்பிலும் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.
இந்த விழாக்களுக்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பஞ்சப்பள்ளி ஊராட்சி ஒட்டர்திண்ணையில் புதிய தொடக்க பள்ளி கட்டிடத்தையும், ஏழு குண்டனூரில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
இணைப்பு சாலைஇந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தார்சாலைகளே இல்லாத கிராமங்கள் இருக்க கூடாது என்ற தமிழக அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து கிராமங்களுக்கும் தேவையான புதிய தார்சாலைகள், இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நாகராஜன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு பணியாளர் சங்க தலைவர் பழனிச்சாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் மாணிக்கம், கோபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், சிவப்பிரகாசம், சண்முகம், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சரவணன், ராஜா, ரவிசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.