அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கடலூரில் 3 இடங்களில் நீர்–மோர் பந்தல் முன்னாள் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் திறந்து வைத்தார்

கடலூரில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 3 இடங்களில் நீர்–மோர்

Update: 2017-03-19 23:00 GMT

கடலூர்,

நீர்–மோர் பந்தல் திறப்பு

கடலூரில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் நீர்–மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் அருகில் நடைபெற்றது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் தலைமை தாங்கி, நீர்–மோர் பந்தலை திறந்து வைத்து நீர்–மோருடன், இளநீர், குளிர்பானம், தர்பூசணி ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மீனவர் அணி செயலாளர் கே.என்.தங்கமணி, 9–வது வார்டுசெயலாளர் சுரேஷ்பாபு, வர்த்தக சங்க தலைவர் வரதன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், துணை தலைவர் செந்தில், நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் தாமோதரன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செம்மண்டலம்

கடலூர் செம்மண்டலம் கே.என்.சி. கல்லூரி அருகில் நடைபெற்ற நீர்–பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. துரை அன்பரசன், எஸ்.பி.கே.உமாசந்திரன், லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ராஜீ, கணேசன், முரளிதரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோவன், சேகர், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் விஜயராயலு வக்கீல் வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுப்பாளையம்

கடலூர் புதுப்பாளையம் ராஜகோபால் சாமி கோவில் அருகில் நீர்–மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். முன்னாள் தொகுதி கழக துணை செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன், வார்டு செயலாளர் சந்திரபால், எழிலரசன், முருகன், முன்னாள் கவுன்சிலர் ஆதிநாராயணன், சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்