உஷாரய்யா உஷாரு..
அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்ந்த பணியில் இருக்கிறார். நிறைய சம்பளம். வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது
அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்ந்த பணியில் இருக்கிறார். நிறைய சம்பளம். வயது ஐம்பதை நெருங்கிக்கொண்டிருக்கிறது. மனைவிக்கும்- அவருக்கும் பல ஆண்டுகளாக பிரச்சினை. சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
மனைவியை பிரிந்த அவருக்கு மதுவும், மாதுவும் விருப்பமானவைகளாக இருந்தன. அதனால் மீண்டும் ஒரு கல்யாணம் செய்துகொள்ளலாம் என்ற ஆசை துளிர்த்தது. விவாகரத்து செய்துகொண்ட பெண் யாரையாவது மறுமணம் செய்துகொள்ளலாம் என்ற தேடுதல் வேட்டையில் இறங்கினார். அப்போது முதிர்கன்னியான அந்த பெண்ணின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது.
படித்தவள், திருமணமாகாதவள், அழகானவள் போன்ற தகுதிகள் அவருக்கு பிடித்துப்போக, அவளுடன் நட்பை தொடர்ந்தார். அடிக்கடி சந்தித்தார்கள். அவர், அவளிடம் மனதை பறிகொடுத்தார். விரைவாக அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார். ஆனால் அவளோ, அவரிடம் பிடிகொடுக்காமலே பழகிக்கொண்டிருந்தாள். அவளோடு தனிமையை பகிர்ந்துகொள்ள அவர் நினைத்தபோதும் அவள் அதற்கு மசியவில்லை. அதே நேரத்தில் ‘தனக்கு காதலிலோ, திருமணத்திலோ விருப்பம் இல்லை’ என்றும் அவள் நேரடியாக சொல்லவில்லை.
அவளை புரிந்துகொள்ள முடியாமல் அவர் தவித்துக்கொண்டிருக்க, அவளோ அவரிடம் பணத்தை கறப்பதில் மட்டும் குறியாக இருந்தாள். அவ்வப்போது தனது தேவைக்கு பணம் வாங்கிக்கொண்டே இருந்தாள். அவர் வாங்கிக்கொடுக்கும் பரிசுப் பொருட்களையும் முகம் சுளிக்காமல் பெற்றுக்கொண்டிருந்தாள்.
அப்படியே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாத அவர், ‘நான் உன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். இதற்கு மேலும் என்னால் காத்திருக்க முடியாது. உன் பெற்றோரை சந்தித்து நான் பேசியே ஆகவேண்டும்’ என்றார். அவளும் அப்படி.. இப்படி.. என்று ஒரு மாதத்தை கடத்திவிட்டு, பின்பு தனது வீட்டு விலாசத்தை கொடுத்து, குறிப்பிட்ட நாளில் அங்கு வரும்படி கூறினாள்.
அவர், ‘எப்படியாவது அவளது பெற்றோரிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விடவேண்டும்’ என்ற திட்டத்துடன், நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள அவளது வீட்டின் முன்னால் போய் இறங்கினார். அவள் சோகமான முகத்தோடு வந்து அவரை வரவேற்று, வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள்.
வீட்டிற்குள் துர்நாற்றம் வீசியது. அவர் மூக்கை பிடித்துக்கொண்டு உள்ளே செல்ல, அங்கே அருகருகே இரண்டு முதியவர்கள் எலும்பும், தோலுமாய் படுத்துக் கிடந்தார்கள். சிறுநீர் வெளியேற குழாய்கள் இருவருக்குமே பொருத்தப்பட்டிருந்தது. அவர்கள் அருகில் ஏகப்பட்ட மருந்து, மாத்திரைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. அந்த அறையே வாந்தியை வரவழைப்பதாக இருந்தது. இருவரும் கண்களை மூடிய நிலையில் தளர்ந்து போய் படுக்கையில் கிடந்தார்கள்.
‘இரவு முழுவதும் இருமலாலும், வலியாலும் துடித்த என் அப்பாவும், அம்மாவும் இப்போதான் தூங்குகிறார்கள்’ என்றாள்.
அவர், அவளை பரிதாபமாக பார்க்க ‘பத்து வருடமாக இந்த மரண போராட்டம் நடக்கிறது. எவ்வளவோ பணம் செலவு செய்தும் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இவர்களை இப்படியே போட்டுவிட்டு என்னாலும் வேலைக்கு செல்ல முடியவில்லை. செலவை சமாளிக்க முடியாமல் தடுமாறுவதால் தான் உங்களிடம் அடிக்கடி பணம் வாங்க வேண்டியதாகி விட்டது. நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள். இவர் களை இப்படியே போட்டுவிட்டு என்னால் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? அதுமட்டுமல்லாமல் எனக்கு பெண்களுக்கான தாம்பத்ய உணர்வே கிடையாது. என்னால் மணவாழ்க்கை வாழவே முடியாது. இன்னொரு பெரிய கொடுமை என்னவென்றால் எனக்கு 35 வயதாகியும் நான் வயதுக்கும் வரவில்லை” என்றபடி கண்ணீர் விட்டாள்.
பணத்தை இழந்து, பாசத்தை வளர்த்துக்கொண்ட அவர், சோகமாய் அவளை பார்த்தபடி நிற்க, ‘என்னை பார்த்து நீங்கள் அனுதாபப்பட்டு எந்த பலனும் இல்லை. இப்படிப்பட்ட கஷ்டத்தை அனுபவிக்கவேண்டும் என்பது என் தலையெழுத்து. நான் இந்த சோகத்தை அனுபவித்துவிட்டுப்போகிறேன். நீங்கள் என்னை மறந்துவிட்டு வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்துகொள்ளுங்கள். இனிமேல் உங்கள் வாழ்க்கையில் நான் தலையிடமாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று அவர் காலைபிடித்துக் கதறினாள்.
முதியோர்களின் சோக காட்சிகள், அவளது அழுகை எல்லாம் சேர்ந்து அவர் மனதை பிசைய, இழந்த சில லட்சம் ரூபாயை பொருட்படுத்தாமல் ‘இனியும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேள்’ என்றபடி வேதனையோடு வெளியேறினார்.
முக்கியமான சிக்னல்களிலும், பொது இடங்களிலும் தளர்ந்துபோய் தோளில் தூங்கும் குழந்தைகளை காட்டி அனுதாபத்தை பெற்று சில பெண்கள் பணம் பெறுவதுபோல், முதியோர்களை காட்டி சோகத்தை பிழியவைத்து திட்டம்போட்டு பணம் பறிப்பது அந்த பெண்ணின் வழக்கம். அதற்காகவே இயங்கும் ‘நெட்ஒர்க்’ ஒன்றில் அவளும் ஒரு அங்கம். அவளிடம் காதல் வலையில் விழுந்து, பணத்தை இழந்து, சோகத்தை பரிசாக பெற்று, ஏமாந்தவர்கள் இவரைப் போன்று பலர்! அடுத்தது யாரோ?!
- உஷாரு வரும்.