மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ரூ.710 கோடி ஒதுக்கீடு

மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.;

Update:2017-03-19 04:16 IST

மும்பை,

மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.710 கோடி ஒதுக்கீடு

மும்பையில் வெர்சோவா–காட்கோபர் இடையே மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கொலபா– பாந்திரா– சீப்ஸ், தகிசர்–டி.என். நகர், தகிசர்– அந்தேரி இடையே மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ.710 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்பட்டால் மும்பைவாசிகளுக்கு அது வரமாக அமையும்.

நவிமும்பை விமான நிலையம்

இதேப்போல சிவ்ரி– நவசேவா டிரான்ஸ்ஹார்பர் வழித்தடம், நவிமும்பை விமான நிலையம், நவிமும்பை மெட்ரோ ரெயில், மும்பை கடற்கரை சாலை திட்டங்களை நிறைவேற்ற துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் நவிமும்பை இன்னும் பல மடங்கு வளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்