கோபியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அந்தியூர், கோபியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2017-03-18 22:45 GMT

அந்தியூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அந்தியூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து அந்தியூர் வட்டார செயலாளர் பழனிச்சாமி விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஓய்வூதிய தொகையை மாதம்தோறும் 1–ந் தேதி வழங்க வேண்டும், கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய பலன்களை வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் அந்தியூர் வட்டார தலைவர் திருவேங்கடம், பொருளாளர் முருகையா, துணைத்தலைவர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கோபி போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் ருக்மாதேவன் தலைமை தாங்கினார். செயலாளர் நடராஜன், சி.ஐ.டி.யு. செயலாளர் விஜயராஜ், தலைவர் துரைராஜ், பணியாளர்கள் சம்மேளன செயலாளர் சரவணன் உள்பட ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

மேலும் செய்திகள்