சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களை நீதிபதிகள் ஆய்வு
குத்தாலத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
குத்தாலம்,
மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுப்படி பல்வேறு மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் பழனிசாமியின் பரிந்துரையின் பேரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அதனை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் குத்தாலத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களை முதன்மை சார்பு நீதிபதி மணிவண்ணன், கூடுதல் சார்பு நீதிபதி ஆனந்தன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்திரசேகரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெகதீசன், குற்றவியல் நீதிபதிகள் செல்லப்பாண்டியன், மணிகண்டராஜா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கொள்ளிடம்
இதேபோல் கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 42 ஊராட்சிகளிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொள்ளிடம் அருகே கடவாசல், எம்.எஸ்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களை நாகை மாவட்ட சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதலுக்கான ஆணையர் ஜம்புலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வராஜ், ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் அருமைநாதன், ஊராட்சி செயலாளர் திருஞானம் ஆகியோர் உடன் இருந்தனர்.