தாமரைப்பூண்டியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

செந்துறை,
அரியலூர் மாவட்டம் ஆலத்தியூர், தளவாய் கிராமங்களில் அமைந்துள்ள தனியார் சிமெண்டு ஆலைகள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தாமரைப்பூண்டியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தனியார் சிமெண்டு ஆலைகளை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும், சிமெண்டு ஆலைகளிலிருந்து வெளிவரும் நச்சுப்புகையால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நச்சுப்புகையை கட்டுப்படுத்த வேண்டும், தனியார் சிமெண்டு ஆலைகள் வேலைவாய்ப்பில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை உடனடியாக மூட வேண்டும், சுண்ணாம்புக்கல் சுரங்கங்களால் குடிநீரில் சுண்ணாம்பு கலந்து வருகிறது. இதனை குடிப்பதால் இப்பகுதி மக்களுக்கு சிறுநீரக கல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இப்பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் தாமரைப்பூண்டி, ஆலத்தியூர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.