விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட 127 கிராம் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்
திருச்சி விமானநிலையத்தில் 127 கிராம் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்பட்டு,
மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது மன்னார்குடியை சேர்ந்த பயணி சித்ரவேல் கொண்டு வந்த உடைமையில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கப்பூர் டாலரான அந்த பணம் இந்திய மதிப்பில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 750 ஆகும். இதையடுத்து அந்த பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து சித்ரவேலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கம் பறிமுதல்
இதேபோல் நேற்று காலை கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மற்றொரு ஏர் ஏசியா விமானம் வந்தது. இதில் பயணம் செய்து வந்த மலேசியாவை சேர்ந்த அல்அமீன் உடையில் மறைத்து வைத்து 93.50 கிராம் எடையுள்ள முழுமை பெறாத தங்க சங்கிலி மற்றும் 34 கிராம் எடையுள்ள முழுமை பெறாத மோதிரம் ஆகியவற்றை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தி வரப்பட்ட 127.50 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க சங்கிலி, மோதிரத்தின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 468 என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அல்அமீனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.