தஞ்சையில் பரிதாபம்: மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி பலி

தஞ்சையில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-03-18 20:46 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மேலவீதியில் உள்ள சுந்தரம்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது58). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். மேலவீதியில் வந்த போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த கதிரேசனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

இந்த விபத்து குறித்து தஞ்சை நகர போக்குவரத்து விபத்து தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதிரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்