கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடங்களை முதல்–அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்
கோவை கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடங்களை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 40–க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள பழைய கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாததால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.19.80 கோடி செலவில் 3 தளங்களுடன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தளத்திலும் 25 அரசு துறை அலுவலகங்கள் என்று மொத்தம் 100 அரசு துறை அலுவலகங் கள் இடம் பெறுகின்றன. இதை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் அலுவலகத்தின் உள்ளே சென்று கல்வெட் டை திறந்து வைத்தார். பின்னர் அவர், மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பார்வையிட்டார்பின்னர் அவர், தரைத்தளத்தில் உள்ள கருவூல அலுவலகம், மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கு, முதல் தளத்தில் உள்ள கலெக்டர் அலுவலக அறை, நேர்முக உதவியாளர்கள் அறைகள், கூட்டரங்கம் உள்ளிட்ட பல்வேறு அலுவலங்களை பார்வையிட்டார். அப்போது முதல்–அமைச்சரிடம், புதிய கட்டி டத்தில் உள்ள வசதிகள் குறித்து கலெக்டர் ஹரிகரன் விளக்கினார். இதையடுத்து அவர், வெளியே வந்தபோது மாற்றுத்திறனாளி ஒருவர் மனுகொடுத்தார். அதை அவர் பெற்றுக்கொண்டார்.
கலெக்டர் வரவேற்றார்முன்னதாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கலெக்டர் ஹரிகரன் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். முதல்–அமைச்சருடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் இருந்தனர்.
நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் ஏ.பி.நாகராஜன், ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், கே.ஆர்.அர்ஜூனன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன்அர்ஜூனன், எட்டிமடை சண்முகம், கனகராஜ் மற்றும் முத்துவெங்கட்ராம், விஷ்ணுபிரபு, வால்பாறை அமீது, எம்.பி.பாண்டியன் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் கலெக்டர் அலுவலகத்தையொட்டி ஸ்டேட் வங்கி ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கட்டிடத்தையும் திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோவை கொடிசியா புறப்பட்டு சென்றார்.