அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை மாதர்சங்க துணை தலைவர் வாசுகி குற்றச்சாட்டு
அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று அனைத்திந்திய மாதர் சங்க துணை தலைவர் வாசுகி கூறினார்.;
திருப்பூர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர்-அவினாசி ரோட்டில் உள்ள தியாகி பழனிச்சாமி அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அங்குலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாவித்திரி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஷகிலா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் துணை தலைவர் உ.வாசுகி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கப்படவில்லை. ஆனால் அமைச்சர்கள் அனைத்து பொருட்களும் வழங்கப்படுவதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. அரசின் கொள்கைபடி 250 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு கடை என இருக்கவேண்டும். ஆனால் திருப்பூரில் 1,000 முதல் 1,500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு கடை என செயல்பட்டு வருகிறது. அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை. அரிசியின் அளவு குறைக்கப்பட்டு கோதுமை கட்டாயப்படுத்தி வினியோகிக்கப்படுகிறது.
வாங்கிய அளவை விட அதிகமாக ரேஷன் பொருட்கள் பெற்றதாக செல்போனுக்கு தகவல் வருகிறது. ரேஷன் பொருட்கள் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று கோர்ட்டு பலமுறை கூறியும் அரசு கட்டாயப்படுத்துகிறது. திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகித்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
போதிய நிதி ஒதுக்கவில்லை
நிரந்த குடிநீர் தட்டுப்பாட்டுக்கான தீர்வாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் உள்ளது. இந்த திட்டத்திற்காக தமிழக பட்ஜெட்டில் தேவைப்படும் அளவைவிட குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் குறைந்தபட்ச கூலி வழங்கப்பட வேண்டும். அதிர்ச்சியில் மரணம் அடைந்த, தற்கொலை செய்து கொண்ட 17 விவசாயிகளுக்கு மட்டும் தலா ரூ.3 லட்சம் வழங்கியுள்ளது. விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
அரசுகள் அதிகார போட்டியை கைவிட்டு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. பாலியல் வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கு தண்டனை கொடுக்கும் புதிய சட்டம் நடைமுறையில் உள்ளது. இது குறித்து ஊடகங்களின் உதவியோடு பிரசார விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.
நிரந்தர தீர்வு வேண்டும்
தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் அதிகார போட்டியால் சாதாரண மக்கள் கவனிக்கப்படவில்லை. கல்வித்தரம் குறைந்து வருகிறது. விவசாயமும் குறைந்துள்ளது. மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை வழக்கில், பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் பதில் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு இருந்து வருகிறது. இதன் பிரதிபலிப்புதான் முத்துகிருஷ்ணன் தற்கொலை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாரதீய ஜனதா கட்சி கொல்லை புறமாக உள்ளே நுழைய முயற்சிக்கிறது. மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை வழக்கில் மத்திய அரசுக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதிலேயே மாநில அரசும் செயல்படுகிறது. பிற மாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பிரச்சினை வந்தால் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. திருப்பூரில் இருந்து எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படித்த டாக்டர் சரவணன் இறப்பிலும், அவர்களின் பெற்றோர் முயற்சியின் பேரிலேயே அவர் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. அதுபோலவே மாணவர் முத்துகிருஷ்ணனின் இறப்பிலும் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்திலும் யார் சுட்டுக்கொன்றது என்பது தெரியவில்லை. இதனால் இருநாட்டு மீனவர்களும், அதிகாரிகளும் பேசி இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். நெடுவாசல் போராட்டத்திலும், அந்த திட்டத்தை ரத்து செய்வதிலும் நிரந்தர தீர்வு காண தமிழக அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.