சாக்கு மூட்டைகளில் நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள் வீசிச்சென்றது யார்? போலீசார் விசாரணை

வாய்க்கால் பகுதியில் சாக்கு மூட்டைகளில் நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள் வீசிச்சென்றது யார்? போலீசார் விசாரணை

Update: 2017-03-18 23:00 GMT

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் இருந்து காட்டூர் செல்லும் சாலையில் காரப்பாளையம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் அருகே சாலையோரத்தில் நேற்று மதியம் உரச்சாக்கு மூட்டைகள் கிடந்தன. அந்த வழியாக சென்றவர்கள் அதில் ஒரு மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் மனித மண்டை ஓடுகள் இருந்ததை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மற்ற சாக்கு மூட்டைகளிலும் இதுபோல் நூற்றுக்கணக்கான மனித மண்டை ஓடுகள் இருந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு போலீசாரும், வருவாய்த்துறையினரும் வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘வெளியூர் அல்லது வெளி மாவட்டங்களில் இருந்து இவற்றை கொண்டு வந்திருக்கலாம். இவ்வளவு மண்டை ஓடுகளையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து போட்டிருப்பதால் யாராவது கார் அல்லது வேன் போன்ற பெரிய வாகனத்தை பயன்படுத்தி இவற்றை இங்கு கொண்டு வந்திருக்கலாம். நிலத்தை சீர்படுத்தும்போது பழைய சுடுகாடு இருந்திருக்கலாம். அதில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை கொண்டு வந்துபோட்டிருக்கலாம்’ என்றனர்.

மேலும் செய்திகள்