மணல் கடத்தல்; 2 பேர் கைது
பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக மப்பேடு போலீசாருக்கு புகார்கள் வந்தது.
திருவள்ளூர்,
பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக மப்பேடு போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மாட்டு வண்டியை கைப்பற்றி அதை ஓட்டி வந்த கூவம் புதிய காலனியை சேர்ந்த முனுசாமி (வயது 65) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவில் வேகவதி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி அவர் அங்கு போலீசாருடன் விரைந்து சென்றார். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையொட்டி காஞ்சீபுரம் திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்த சிலம்பரசன் (27) என்பவரை போலீசார் கைது செய்து மணல் கடத்திய மாட்டு வண்டியை கைப்பற்றினர்.