இரட்டை இலை சின்னத்தை பெறும் அணிக்காக பிரசாரம் செய்வேன் நடிகர் செந்தில் பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெறும் அணிக்காக பிரசாரம் செய்வேன் நடிகர் செந்தில் பேட்டி

Update: 2017-03-18 22:45 GMT

கண்டமனூர்,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆண்டுவிழாவில் அ.தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளரும், திரைப்பட நடிகருமான செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘அ.தி.மு.க 3 அணியாக பிரிந்து உள்ளது. இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கு பெறுகிறதோ, அந்த அணியை ஆதரித்து ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்வேன்’ என்றார். அப்போது அவரிடம் நீங்கள் சசிகலா அணியா? ஓ.பன்னீர்செல்வம் அணியா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், என்னால் இப்போதைக்கு பதில் எதுவும் கூற முடியாது. முதலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தேர்தல் கமி‌ஷன் உறுதியளிக்கட்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்