செய்துங்கநல்லூரில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பா.ஜனதா கட்சியினர் 41 பேர் கைது

செய்துங்கநல்லூரில் போலீஸ் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பா.ஜனதா கட்சியினர் 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-03-18 20:30 GMT

ஸ்ரீவைகுண்டம்,

செய்துங்கநல்லூரில் போலீஸ் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பா.ஜனதா கட்சியினர் 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

பா.ஜனதா உண்ணாவிரதம்

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம்– கொங்கராயகுறிச்சி இடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அரைகுறையாக விடப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

சென்னல்பட்டி– வசவப்பபுரம்– செய்துங்கநல்லூர் இடையே புதிய தார்சாலை அமைக்க வேண்டும். சேரகுளத்தில் சீராக குடிநீர் வழங்க வேண்டும். முறப்பநாட்டில் மயானத்துக்கு பாதை அமைக்க வேண்டும். 5 ஏக்கருக்கு அதிகமாக பயிர் செய்தவர்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பா.ஜனதா கட்சி சார்பில் செய்துங்கநல்லூர் மெயின் பஜாரில் நேற்று காலையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

41 பேர் கைது

எனவே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். யாரும் கலைந்து செல்லவில்லை.

போராட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் சந்தானகுமார், கோட்ட இணை செயலாளர் ராஜா, மாவட்ட பிரசார பிரிவு தலைவர் மகேசுவரன், மருத்துவர் அணி செயலாளர் கோசல்ராம், ஒன்றிய தலைவர் பெரியசாமி, பொதுச் செயலாளர் சங்கர், வக்கீல் பிரிவு தலைவர் செல்வம், விவசாய பிரிவு நிர்வாகி மாரியப்பன் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்