பார்வதிபுரம் மேம்பால பணிகள்: நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது
பார்வதிபுரம் மேம்பால பணிகள் தொடங்கியதையொட்டி நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்காக பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமைக்க மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தூண்கள் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் பார்வதிபுரம் மின் வாரிய அலுவலகம் முன்பு இருந்து தொடங்கப்பட்டுள்ளது.
பாலப்பணிகள் தொடங்கியுள்ளதையொட்டி அந்த பகுதியில் 18–ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்து இருந்தனர்.
போக்குவரத்து மாற்றம்
அதன்படி இந்த போக்குவரத்து மாற்றம் நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம், மார்த்தாண்டம் மற்றும் தக்கலை மார்க்கத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக நெல்லை மாவட்டம் செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் களியங்காடு சந்திப்பில் இருந்து ஆலம்பாறை, இறச்சகுளம், துவரங்காடு, ஆண்டிதோப்பு, சீதப்பால், செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி வழியாக சென்றன.
இதுபோல நாகர்கோவில் நகருக்குள் வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் களியங்காடு சந்திப்பில் இருந்து ஆலம்பாறை, சன் கல்லூரி, இறச்சகுளம், புத்தேரி வழியாக நாகர்கோவில் நகருக்குள் வந்தன. திருவனந்தபுரம், மார்த்தாண்டம், தக்கலை மார்க்கமாக நாகர்கோவில் வரும் அரசு பஸ்கள் அனைத்தும் பார்வதிபுரம் சந்திப்பு (கே.பி ரோடு வழியாக), பால்பண்ணை சந்திப்பில் இருந்து இடதுபுறமாக திரும்பி வெட்டூர்ணிமடம் வழியாக வடசேரி மற்றும் நெல்லை மாவட்டத்துக்கு சென்றது. மேலும், பார்வதிபுரம் சந்திப்பு (கே.பி.ரோடு வழியாக) பால்பண்ணை, டெரிக் சந்திப்பு, டதி பள்ளி சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா வழியாகவும் வடசேரிக்கு சென்றன.
ஆய்வு பணிகள்
வடசேரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருந்து தக்கலை மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் ஏதும் செய்யப்படாததால் அனைத்து வாகனங்களும் ஏற்கனவே சென்ற வழியிலேயே சென்றன.
பார்வதிபுரம் மேம்பாலம் ‘ஒய்‘ வடிவில் அமைக்கப்பட உள்ளது. அதாவது பார்வதிபுரம் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து தொடங்கி களியங்காடு அருகே வரை ஒரே பாலமாகவும், பின்னர் பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து பால்பண்ணை செல்லும் ரோட்டில் அய்யப்பன் கோவிலில் இருந்து தொடங்கி பார்வதிபுரம் சந்திப்பில் வந்து இணையும் படியாகவும் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. அய்யப்பன் கோவில் பகுதியில் இருந்து பாலப்பணிகள் தொடங்குவதற்கான ஆய்வு நேற்று நடந்தது. விரையில் அந்த சாலையிலும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.