ஓமலூர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை; பெண் உள்பட 9 பேர் கைது
ஓமலூர் பகுதிகளில் பள்ளி, பஸ்நிலையம், கோவில் உள்ளிட்ட இடங்களின்
ஓமலூர்,
ஓமலூர் பகுதிகளில் பள்ளி, பஸ்நிலையம், கோவில் உள்ளிட்ட இடங்களின் அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஓமலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக குப்புசாமி (வயது 42), சுரேந்தர் சிங் (21), கந்தவேல் (27), சுரேஷ் (27), மற்றொரு குப்புசாமி (41) ஆகியோரை கைது செய்தனர்.
இதே போல தீவட்டிப்பட்டி பகுதியில் ராஜசேகர் (45), சின்ராஜ் (55), சித்ரா (34), நாராயணன் (34) ஆகியோரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.