விவசாய கடன் தள்ளுபடி பிரச்சினை தேவேந்திர பட்னாவிசுக்கு தனஞ்செய் முண்டே கண்டனம்

விவசாய கடன் தள்ளுபடி பிரச்சினையில், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்த கருத்துக்கு மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கண்டனம் தெரிவித்தார். தேவேந்திர பட்னாவிஸ் சவால் விவசாய கடன் தள்ளுபடியை வலியுறுத்தி மராட்டிய சட்டசபையையும், மேல்–சபை

Update: 2017-03-17 22:35 GMT

மும்பை,

விவசாய கடன் தள்ளுபடி பிரச்சினையில், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்த கருத்துக்கு மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கண்டனம் தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ் சவால்

விவசாய கடன் தள்ளுபடியை வலியுறுத்தி மராட்டிய சட்டசபையையும், மேல்–சபையையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி சிவசேனா உறுப்பினர்களும் முடக்குகின்றனர்.

சட்டசபையில் நேற்று முன்தினம் உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியில், இதற்கு பதில் அளித்து பேசிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ‘‘விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் பட்சத்தில், ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ள மாட்டார் என்று எதிர்க்கட்சியினரால் உத்தரவாதம் அளிக்க முடியுமா’’ என்று சவால் விடுத்தார்.

தனஞ்செய் முண்டே கேள்வி

அவரது கருத்துக்கு நேற்று மேல்–சபையில் எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கண்டனம் தெரிவித்து கூறியதாவது:–

மராட்டியத்தில் வறட்சி இல்லா சூழல், போலி விதைகள் வினியோகிக்கப்படாது மற்றும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்போம் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசால் உத்தரவாதம் அளிக்க முடியுமா?. இதற்கு அவர் உறுதியளிக்கட்டும். அதன்பிறகு, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

இவ்வாறு தனஞ்செய் முண்டே தெரிவித்தார்.

மேலும் செய்திகள்