திண்டுக்கல்லில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல்லில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல்,
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மாலப்பட்டி காமாட்சிநகர் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.