கள்ளச்சாராய வழக்கில் கைதானவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவு
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின்பேரில் திரவியம் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.;
திருப்போரூர்,
திருப்போரூரை அடுத்த செம்பாக்கம் கிராமத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்றதாக திரவியம் (வயது 48) என்பவரை திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த சாராய பாக்கெட்டுகள் மற்றும் தயாரிப்பு எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின்பேரில் திரவியத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.