பெங்களூரு பன்னரகட்டாவில் இருந்து பிளிகுலா உயிரியல் பூங்காவுக்கு புதிய வரவாக நீர்யானை வருகை
பெங்களூரு பன்னரகட்டாவில் இருந்து பிளிகுலா உயிரியல் பூங்காவுக்கு புதிய வரவாக நீர்யானை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
மங்களூரு,

உயிரியல் பூங்கா
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பிளிகுலாவில் டாக்டர் சிவராம் வன உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 5 சிங்கங்கள், 11 புலிகள், 11 சிறுத்தைகள், 50 மான்கள், 300 பறவைகள் மற்றும் பாம்புகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் இந்த பூங்காவுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இந்த பூங்காவில் பல்வேறு வகையான பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருவதால் அதைக்காண மக்கள் கூட்டம் அலைமோதும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து இந்த பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
நீர்யானை
இந்நிலையில், இந்த பூங்காவுக்கு பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் இருந்து நீர்யானை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பூங்கா அதிகாரிகளும், ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்யானையைக் காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகளும் பூங்காவுக்கு வரத்தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில், “பூங்காவுக்கு புதிய விருந்தாளியாக நீர்யானை ஒன்று வந்துள்ளது. அதைக்காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற வனவிலங்குகளை நாம் வனப்பகுதிக்குள் சென்று பார்க்க இயலாது. அதை நாம் இங்கு பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது” என்று கூறினார்.