மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழகத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்ற மாணவர் மர்ம மரணம் தொடர்பாக உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்.

Update: 2017-03-17 21:30 GMT

மலைக்கோட்டை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழகத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்ற மாணவர் மர்ம மரணம் தொடர்பாக உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்த வேண்டும். இது போன்ற படுகொலைகள் இனியும் நடக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் மன்றம் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் மன்றத்தின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு அமைப்பை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் லெனின் நிருபர்களிடம் கூறுகையில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை சகித்து கொள்ள முடியாது, மத்திய அரசு இது குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். முத்து கிருஷ்ணன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும், முத்து கிருஷ்ணன் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்