குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் அரசு பஸ்சை சிறைபிடித்து கிராமமக்கள்

புத்தாநத்தம் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-17 22:15 GMT

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முத்தாழ்வார்பட்டி ஊராட்சியில் உள்ள வடக்கிக்களம் பகுதியில் சுமார் 50–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.ஆனால் இன்றுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

பஸ் சிறைபிடிப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் முத்தாழ்வார்பட்டியில், மணப்பாறையில் இருந்து கல்லாமேடு நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் எல்லம்மாள் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து சிறைபிடித்த பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்