காஞ்சீபுரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகள் பறிமுதல்
காஞ்சீபுரம் பஸ் நிலையம், தாலுகா நிலையம் அருகே ரூ.5 ஆயிரம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல்.
காஞ்சீபுரம்,
தமிழ்நாட்டில் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் அருகே சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவும் உள்ளது. இதையும் மீறி பல கடைகளில் புகையிலை மற்றும் சிகரெட்டுகள் விற்பனை செய்து வருவதாக காஞ்சீபுரம் நகர் நலஅலுவலர் முத்துவுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையொட்டி அவர் அதிகாரிகளுடன் காஞ்சீபுரம் பஸ் நிலையம், தாலுகா நிலையம் அருகே உள்ள கடைகளுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது கல்வி நிறுவனங்களின் அருகே ரூ.5 ஆயிரம் மதிப்பிலான சிகரெட்டுகள் பதுக்கிவைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்து ரூ.1,200 அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் சுற்றுலா நகரமான காஞ்சீபுரத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே ஓட்டல்களில் சமையல் அறைகள், கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் காஞ்சீபுரம் நகர்நல அலுவலர் முத்து தெரிவித்தார்.