திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 440 பேர் கைது
திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 440 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருவள்ளூர்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 14–ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மில்கி ராஜாசிங், மாவட்ட பொருளாளர் மகேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாலை மறியல்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் காந்திமதிநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அருள்டேனியல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளான ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.
அப்போது தேர்தல் பணிக்கு மட்டும் முக்கியத்துவம் தரவேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், ஊராட்சி செயலாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் திடீரென திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது
இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போலீசார் மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 240 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மறியல் போராட்டத்தால் திருவள்ளூர்– திருப்பதி நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே மாவட்ட ஊராக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட தலைவர் சார்லஸ் சசிகுமார் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமிபதி, வெற்றிச்செல்வன், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், நாராயணன் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 10 பெண்கள் உள்பட 200 பேரை கைது செய்தனர்.