சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 126 பேர் கைது

Update: 2017-03-17 22:30 GMT

கரூர்,

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஊரக வளர்ச்சி துறை குறித்து மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவை விதி 110–ன் கீழ் அறிவித்த அரசாணைகளை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இதைத்தொடர்ந்து நேற்று 4–வது நாள் போராட்டமாக கரூர் தாலுகா அலுவலகத்தில் கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கரூர் பஸ் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து ஜவகர் பஜாரில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்பட 16 பெண்கள் உள்பட 126 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்