மறைந்த முன்னாள் எம்.எல்.சி. என்.மஞ்சுநாத் உடலுக்கு எடியூரப்பா இறுதி அஞ்சலி

மைசூரு டவுனை சேர்ந்தவர் என்.மஞ்சுநாத் (வயது 48). காங்கிரசாரை சேர்ந்த இவர் முன்னாள் எம்.எல்.சி. ஆவார். இவரது தந்தை டி.என்.நரசிம்மமூர்த்தி மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

Update: 2017-03-17 21:30 GMT

மைசூரு,

மைசூரு டவுனை சேர்ந்தவர் என்.மஞ்சுநாத் (வயது 48). காங்கிரசாரை சேர்ந்த இவர் முன்னாள் எம்.எல்.சி. ஆவார். இவரது தந்தை டி.என்.நரசிம்மமூர்த்தி மந்திரியாக பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக என்.மஞ்சுநாத் இருதய கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

மேலும் பெங்களூருவில் உள்ள ஜெயதேவா இருதய சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் மரணமடைந்தார்.

இதைதொடர்ந்து அவரது உடல் நேற்று மைசூருவுக்கு கொண்டுவரப்பட்டது. அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக மஞ்சுநாத்தின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, மந்திரி தன்வீர்சேட், எம்.எல்.ஏ.க்கள் பி.வாசு, எம்.கே.சோமசேகர் மற்றும் துருவநாராயண் எம்.பி. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இதைதொடர்ந்து மைசூரு பன்னிமண்டபத்தில் உள்ள அவரது தந்தை சமாதியின் அருகிலேயே மஞ்சுநாத்தின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்