குந்தாபுரா அருகே பி.யூ.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வியா? போலீஸ் விசாரணை
குந்தாபுரா அருகே பி.யூ.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மங்களூரு,
குந்தாபுரா அருகே பி.யூ.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பி.யூ.சி. மாணவி தற்கொலைஉடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா தர்க்காசே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் பூஜாரி. இவரது மனைவி சாது. இந்த தம்பதிக்கு அஸ்வினி (வயது 19) என்ற மகள் இருந்தார். இவர் குந்தாபுராவில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் பி.யூ.சி. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
இவரது தந்தை மஞ்சுநாத் பூஜாரி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சாது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் மாணவி அஸ்வினி மட்டும் தானியாக இருந்தார். அந்த சமயத்தில் திடீரென்று வீட்டின் படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் அஸ்வினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றிருந்த அவரது தாய் சாது வீட்டிற்கு வந்தார். அவர் தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார்.
காதல் தோல்வியா?இதுபற்றி தகவல் அறிந்ததும் பைந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்த அஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குந்தாபுரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்த அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அஸ்வினி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிவைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அந்த கடிதத்தில், ‘ எனது தற்கொலைக்கு காரணம் வேறுயாரும் அல்ல. நான் தற்போது அணிந்துள்ள ஆடையை அணிவித்தபடியே எனது உடலை புதைக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது. எனவே, காதல் தோல்வியால் அஸ்வினி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
பெரும் சோகம்இந்த சம்பவம் பற்றி பைந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பி.யூ.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.