கட்சிபெருமாநத்தத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

கட்சிபெருமாநத்தத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,

Update: 2017-03-17 22:30 GMT

விருத்தாசலம்,

டாஸ்மாக் கடை

தொரவளூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பரவளூர், தொரவளூர், கட்சிபெருமாநத்தம் ஆகிய கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.

இந்நிலையில் கட்சிபெருமாநத்தம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் எதிரே டாஸ்மாக் கடை அமைக்க அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் பரவியது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ–மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் என்றும், மதுபிரியர்கள் குடித்துவிட்டு இந்த வழியாக செல்லும் மாணவிகளை கேலி கிண்டல் செய்யும் நிலை உருவாகும் என்றும் கருதிய கட்சிபெருமாநத்தம் கிராம மக்கள், டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் விருத்தாசலம் கோட்டாட்சியர் கிருபானந்தத்திடம் மனு கொடுத்தனர்.

கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

இந்த நிலையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதை தொடர்ந்து நேற்று காலை அப்பகுதி மக்கள் பஸ் நிறுத்தம் அருகே ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்