சேந்தமங்கலம் அரசு ஆண்கள் பள்ளியில் மனவளக்கலை யோகா பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கும் விழா
சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 9–ம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் மனவளக்கலை யோகா பயிற்சிசேந்தமங்கலம்
சேந்தமங்கலம்,
சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 9–ம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் மனவளக்கலை யோகா பயிற்சிசேந்தமங்கலம் அறிவுத் திருக்கோவில் சார்பில் வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் டாக்டர் உதயக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமையாசிரியர் முத்துசாமி வரவேற்றார்.
விழாவில் மனவளக்கலை மன்ற கல்விக்குழுத் தலைவர் அப்புசாமி, பயிற்சி நடத்துனர் சுந்தரம், சரஸ்வதிமணி மற்றும் இந்திராதேவி ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினர். இதில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.