மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: ஏழை மாணவர்களுக்கு நோட்டுகள்

இளையான்குடி மேற்கு ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சி தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

Update: 2017-03-17 22:45 GMT

இளையான்குடி,

இளையான்குடி மேற்கு ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சி தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் கவுன்சிலர் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன், கண்ணன், மகேசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன் விழாவில் கலந்து கொண்டு, ஏழை மாணவர்களுக்கு நோட்டுகள், பேனா–பென்சில் மற்றும் இனிப்பு வழங்கினார். அதன்பின்பு அந்த பகுதியில் மரக்கன்றுகளை நட்டார். விழாவில், தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் பெரியசாமி, துணைச் செயலாளர் மலைமேகு, ஊராட்சி செயலாளர்கள் மலைச்சாமி, மதியழகன், இளைஞரணி பாலாஜி, கருப்பையா, தட்சிணாமூர்த்தி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்