குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;
அந்தியூர்,
அந்தியூர் பேரூராட்சி 5-வது வார்டுக்கு உள்பட்ட பகுதி முத்துக்குமாரசாமி வீதி. இங்கு 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இங்குள்ளவர்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை.
இதனால் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் பிடித்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று பகல் 11 மணி அளவில் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் பேரூராட்சி செயல் அதிகாரி முருகேசன் உடனே அலுவலகத்துக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரியிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்களுக்கு கடந்த 1 மாதமாக குடிநீர் சரியாக கிடைக்கவில்லை. இதனால் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம். இதுகுறித்து புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி எங்கள் பகுதியில் தெருவிளக்கு, சாலை, பொதுக்கழிப்பிடம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் இல்லை. அதனால் அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித்தர வேண்டும்,’ என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரி கூறுகையில், ‘குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.