தொழில் தொடங்க கடன் வாங்கி தருவதாக கூறி 8 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி
தொழில் தொடங்க கடன் வாங்கி தருவதாக கூறி 8 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரி.
பவானி,
தொழில் தொடங்க கடன் வாங்கி தருவதாக கூறி 8 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரி உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
புகார் மனு
அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் விராலிக்காட்டூரை சேர்ந்த பரதனின் மனைவி கவுசல்யா (வயது 27), சாலைக்குட்டைப்புதூரை சேர்ந்த சிவப்பிரகாஷ் மனைவி கவிதா (25), காட்டுப்பாளையத்தை சேர்ந்த தேவராஜ் மகன் கார்த்தி (27), பச்சாபாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் கலையரசன் (27), மறவன்குட்டையை சேர்ந்த ராமராஜ் மகன் ரமேஷ் (40), செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த சிவராமன் மனைவி செல்லம்மாள் (30), முனுசாமி மனைவி செல்வமணி (25), ரவிக்குமார் மனைவி கிருஷ்ணவேணி (28) ஆகிய 8 பேர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-
கடன் வாங்கி தருவதாக கூறி...
நாங்கள் 8 பேரும் அந்தியூர் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று தொழில் தொடங்க நபார்டு திட்டத்தின் கீழ் கடன் உதவி கேட்டோம். அப்போது அங்கிருந்த வங்கி அதிகாரி, இதுதொடர்பாக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவன பொறுப்பாளரை அணுகும்படி கூறினார்.
இதைத்தொடர்ந்து அந்த தொண்டு நிறுவன பொறுப்பாளர் மற்றும் அவருடைய மனைவியை நாங்கள் அணுகினோம். அப்போது அவர்கள், 25 சதவீதம் மானிய தொகையுடன் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் கடன் வாங்கி தருவதாக எங்களிடம் உறுதி அளித்தனர். மேலும் நாங்கள் ஒவ்வொருவரும் ரூ.25 ஆயிரம் வங்கியில் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்றனர். கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் 8 பேரும் தலா ரூ.25 ஆயிரம் வைப்புத்தொகையாக மொத்தம் ரூ.2 லட்சத்தை தொண்டு நிறுவன பொறுப்பாளரிடம் வழங்கினோம்.
நோட்டீஸ்
இந்த நிலையில் கிருஷ்ணவேணிக்கு ரூ.3 லட்சம், மற்ற 7 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.38 லட்சத்துக்கான காசோலை வங்கி மூலம் தொண்டு நிறுவன பொறுப்பாளரிடம் கடந்த 2-3-2016 அன்று வழங்கப்பட்டு உள்ளது. இந்த காசோலையை பெற்றுக்கொண்ட தொண்டு நிறுவன பொறுப்பாளர், எங்களுக்கு தொழில் செய்வதற்கான எந்திரங்கள் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். இதுவரை அவர் எங்களுக்கு தொழில் செய்வதற்கான எந்திரங்கள் வாங்கி கொடுக்கவில்லை. ஆனால் எங்கள் பெயரில் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் எந்திரங்கள் வாங்கியதாக போலி ஆவணம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே அந்தியூர் வங்கியில் வேலை பார்த்து வந்த அதிகாரி வேறு வங்கி கிளைக்கு மாறுதலாகி சென்றுவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கடன் தொகையை செலுத்த வேண்டும் என்று கோரி எங்கள் 8 பேருக்கும் வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ரூ.40 லட்சம் மோசடி
இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரி, தொண்டு நிறுவன பொறுப்பாளர் ஆகியோரை தொடர்பு கொண்டோம். அவர்கள் எங்களை மிரட்டுகிறார்கள். அப்போதுதான் நாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தோம். எனவே தொழில் தொடங்க கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரி, தனியார் தொண்டு நிறுவன பொறுப்பாளர், அவருடைய மனைவி மற்றும் எந்திரங்கள் வழங்க போலி ஆவணம் தயாரித்து கொடுத்த நிறுவன உரிமையாளர் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்த 8 பேரும் நேற்று பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு விசாரணைக்காக சென்றனர். ஆனால் அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் இல்லை. வருகிற 19-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அங்கிருந்த போலீசார் கூறியதை தொடர்ந்து 8 பேரும் அங்கிருந்து வீட்டுக்கு சென்றனர்.