டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.;

Update: 2017-03-16 21:16 GMT
திருவள்ளூர்,

ஆவடி கோவர்த்தனம் நகர், பாரதி நகர் பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது:–

நாங்கள் ஆவடி கோவர்த்தனம் நகர், பாரதி நகர் பகுதியில் வசித்து வருகிறோம். இந்த நிலையில் ஆவடி– பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை நெடுஞ்சாலை ஓரமாக உள்ளதால் அந்த கடையை அகற்ற அரசு முடிவெடுத்துள்ளது. அந்த கடையை பாரதி நகர் பகுதியில் பள்ளி மற்றும் குடியிருப்புக்கு அருகே அமைக்க பணிகள் நடந்து வருகிறது. அவ்வாறாக பள்ளி மற்றும் குடியிருப்புகளுக்கு அருகே டாஸ்மாக் கடைஅமைக்கப்பட்டால் பெண்கள் மற்றும் மாணவிகள் என பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.

புகார் மனு

 எனவே எங்கள் பகுதியில் வர இருக்கும் டாஸ்மாக் கடையை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இதுதொடர்பான புகார் மனுவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

மேலும் செய்திகள்