ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்: குடிநீர் வினியோகத்தை முழுமையாக நிறுத்த முடிவு
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று 3–வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக இன்று முதல் 95 பஞ்சாயத்துகளிலும் குடிநீர் வினியோகத்தை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்,
உள்ளாட்சித்தேர்தலை உடனே நடத்த வேண்டும், பஞ்சாயத்து அலுவலக செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பஞ்சாயத்து அலுவலக செயலாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அரசாணை மற்றும் ஐகோர்ட்டு தீர்ப்பு படி ஊதியம் வழங்க வேண்டும், உதவி இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு வழியாக நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 14–ந் தேதி முதல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 3–வது நாளாக இந்தப் போராட்டம் தொடர்ந்தது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், 95 பஞ்சாயத்து அலுவலகங்கள், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வளர்ச்சிப்பிரிவு அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், பஞ்சாயத்துகள் உதவி இயக்குனர் அலுவலகம், தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகம் போன்றவை ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. ஒரு சில அலுவலகங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். மேலும் பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர் வினியோகப்பணி, தெருவிளக்குகள் சீரமைக்கும் பணி, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. மேலும் வளர்ச்சிப்பிரிவு அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டம்
இதையொட்டி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் வர்க்கீஸ் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பு, பொருளாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நீலத்தங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் லீடன் ஸ்டோன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் சுமதி விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டம் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத்தலைவர் வர்க்கீஸ் கூறியதாவது:–
குடிநீர் வினியோகம் நிறுத்தம்
எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் மொத்த ஊழியர்கள் 529 பேரில் 447 பேர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 79 சதவீதம் பேர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
எங்களது போராட்டத்துக்கு அரசு இதுவரை தீர்வு காணாததால் நாளை (அதாவது இன்று) முதல் குமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள 95 பஞ்சாயத்துகளில் குடிநீர் வினியோகத்தை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளோம். மேலும் நாளை (இன்று) காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இதன் பிறகும் எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படவில்லை என்றால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு வர்க்கீஸ் கூறினார்.