புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
திருத்துறைப்பூண்டியில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி.
திருத்துறைப்பூண்டியில் அஞ்சல் துறை ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சல் துறை ஊழியர் சங்க தலைவர் எஸ்.நாகலிங்கம் தலைமை தாங்கினார். கிளைத்தலைவர்கள் என்.விநாயகம், வி.கணேசன், செயலாளர்கள் பி.அன்பழகன், ஆர்.தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்.
ஊதிய உயர்வு
அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் பணிக்காலத்திற்குள் 5 கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கு 5 சதவீத உச்சவரம்பை நீக்கிவிட்டு, தகுதியுள்ள அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். 5ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை திருத்தி அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கிளை பொருளாளர்கள் எல்.சுப்பிரமணியன், எம்.செந்தில்குமார், பி.கிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.