சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி அதிகாரி ஆய்வு

கீழ்வேளூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியினை அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2017-03-16 22:45 GMT
கீழ்வேளூர்,

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீப்பின்படியும், நாகை மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படியும் நாகை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடை பெற்று வருகிறது. இந்த பணியினை நாகை மாவட்ட சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதலுக்கான ஆணையர் ஜம்புலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சி வல்லமங்கலம், வடக்குவெளி, ஆணைமங்கலம் ஊராட்சி ஓர்குடி, எரவாஞ்சேரி ஊராட்சி மற்றும் கீழ்வேளூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியினை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) அருள்சேகரன், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் வெற்றிவேல், சிவபிரகாசம், பணி மேற்பார்வையாளர்கள் செந்தில், பாலச்சந்திரன், அன்பழகன் மற்றும் ஊராட்சி செய லாளர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆலோசனை கூட்டம்

அதைதொடர்ந்து கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நாகை மாவட்ட சீமைக் கருவேல மரங்கள் அகற்றுதலுக்கான ஆணையர் ஜம்புலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் தங்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும். மேலும் சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதில் அரசு அலுவலர்களோடு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆணையர் கூறினார். 

மேலும் செய்திகள்