நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் 4-வது நாளாக உண்ணாவிரதம் நீடிப்பு
வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து நேற்று நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால் நேற்று 4-வது நாளாக மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.
நாகப்பட்டினம்,
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர் பிரிட்ஜோ (வயது21) உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர். அதைதொடர்ந்து தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையினரை கண்டித்து நாகை மாவட்ட மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்திலும், உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், கலெக்டர் பழனிசாமி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
மீன்பிடிக்க சென்றனர்
இந்தநிலையில் நேற்று முன்தினம் நாகை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து உதவி கலெக்டர் கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பு, நாகை தாசில்தார் தமிமுல்அன்சாரி ஆகியோர் மீனவர்களை சந்தித்து உண்ணாவிரத போராட்டத்தையும் கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
அதைதொடர்ந்து நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மற்றும் பெண்கள் நேற்று 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று இந்திய தேசிய லீக் பொது செயலாளர் நிஜாமுதீன் கலந்து கொண்டு, இலங்கை அரசை கண்டித்து பேசினார். ஆனால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.