இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு: விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம்
இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நல்லாண்டார்கொல்லையில் விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வடகாட்டில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி பொதுமக்கள் தொடங்கிய போராட்டம் கடந்த 9-ந் தேதி வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்திட்டத்தை மத்திய அரசு கைவிட கோரியும் வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
விளைபொருட்களை...
வடகாட்டில் நேற்று 12-வது நாளாக போராட்டம் நடந்தது. வடகாடு பகுதியை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் வடகாடு தெற்கு கடைவீதி ஆர்ச் அருகில் திரண்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் கருப்பு கொடி ஏந்தி, கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து பெரியகடைவீதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அங்கு வடகாடு பகுதியில் விளையக்கூடிய மா, பலா, வாழை, கடலை உள்ளிட்ட விளைபொருட்களை போராட்ட பந்தலில் கட்டி தொங்கவிட்டு, பந்தலுக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், வடகாடு, வானக்கண்காடு, கோட்டைக்காடு, கருக்காகுறிச்சி, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து எண்ணெய், எரிவாயு வளங்களை எடுக்க தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
பெண்கள் ஒப்பாரி
இதேபோல், நல்லாண்டார்கொல்லையில் நேற்று 29-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒப்பாரி வைத்து இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நல்லாண்டார்கொல்லையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு அருகே 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மொட்டை அடித்து இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் போராட்ட பந்தலில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். வடகாடு, நல்லாண்டார்கொல்லை போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மதியம், இரவு நேரங்களில் உணவு வழங்கப்பட்டது. போராட்டத்தில் நல்லாண்டார்கொல்லை, வடகாடு பகுதிகளை சுற்றி உள்ள பல கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.