சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை நீதிபதி-அதிகாரிகள் ஆய்வு
வேப்பந்தட்டை பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை நீதிபதி-அதிகாரிகள் ஆய்வு
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, தழுதாழை, வெங்கலம், பாண்டகப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள் உள்ளிட்டவற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதனை பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி நசீமாபானு தலைமையில், கூடுதல் தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் சஞ்சீவி பாஸ்கர், குற்றவியல் நீதித்துறை நடுவர் சுஜாதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திரவர்மா, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் வெள்ளைச்சாமி, வேப்பந்தட்டை தாசில்தார் மருதை வீரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி நசீமாபானு கலந்து கொண்டு பேசினார்.