அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-03-16 21:07 GMT
புதுக்கோட்டை,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் மதன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் தீபன் முன்னிலை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் நாகராஜன், செயலாளர் ரெங்கசாமி, துணை தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார்கள். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் நடைபெற்று வரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்