ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி போலீசார் விசாரணை
தஞ்சை அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயில் நிலையத்துக்கும், ஆலக்குடி ரெயில் நிலையத்துக்கும் இடையே திருப்பதி நகர் என்ற இடத்தில் ரெயிலில் அடிபட்ட நிலையில் வாலிபர் பிணமாக கிடப்பதாக தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தஞ்சை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அங்கு பிணமாக கிடந்த வாலிபருக்கு 35 வயது இருக்கும். அவரது இடது மார்பில் சரவணன், வசந்தி என்ற பெயர்களை பச்சை குத்தி இருந்தார். பிணமாக கிடந்தவர் கருப்பு, வெள்ளை நிறுத்தில் கட்டம் போட்ட சட்டையும், நீல நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தார்.
போலீஸ் விசாரணை
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரிய வில்லை. தண்டவாளத்தை கடந்த போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என தெரிய வில்லை. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.