உளுந்தூர்பேட்டை அருகே வாகனம் மோதி பெண் பலி
உளுந்தூர்பேட்டை அருகே வாகனம் மோதி பெண் இறந்தார்.
உளுந்தூர்பேட்டை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்னவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு மனைவி செல்லம்மாள்(வயது 50). இவர் கோவையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தார். பின்னர் செல்லம்மாள் உள்ளிட்ட 25 பேர், ஒரு வேனில் குன்னவாக்கத்துக்கு நேற்று முன்தினம் புறப்பட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் என்ற இடத்தில் உள்ள வந்த போது சாலையோரம் உள்ள ஓட்டல் முன்பு சாப்பிடுவதற்காக டிரைவர் வேனை நிறுத்தினார். வேனில் இருந்து இறங்கிய செல்லம்மாள் இயற்கை உபாதை கழிப்பதற்காக சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
போலீசார் விசாரணைஅப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று, செல்லம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்லம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.