திருப்பூர் மாநகராட்சியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி கலெக்டர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பாயும் நொய்யல் ஆற்றில் அணைமேடு, காசிப்பாளையம்

Update: 2017-03-16 22:45 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பாயும் நொய்யல் ஆற்றில் அணைமேடு, காசிப்பாளையம் ஆகிய பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி, மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையால் நியமிக்கப்பட்ட வக்கீல் ஆணையர் தமிழ்குமரன் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் குருநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கோவேந்தன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்