ராசிபுரம் நகராட்சி ஆணையாளரிடம் தண்ணீர், தெரு விளக்கு வசதி கோரி பா.ம.க.வினர் மனு

ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியை பா.ம.க.

Update: 2017-03-16 22:30 GMT

ராசிபுரம்,

ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியை பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் மோகன்ராஜ், மாநில மாணவர் சங்க ஆலோசகர் நல்வினை விஸ்வராஜ், நகர பா.ம.க.செயலாளர் சுரேஷ், நகர தலைவர் மணி, நகர இளைஞர் அணி தலைவர் யுவராஜ், நகர வன்னியர் சங்க செயலாளர் செந்தில்குமார் மற்றும் பா.ம.க.நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:–

ராசிபுரம் பாரதிதாசன் சாலையில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பின்புறத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று இருந்தது. அந்த ஆழ்துளை கிணற்றை 1,2,3,4–வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். பழுதடைந்துள்ள இந்த ஆழ்துளை கிணற்றை சரி செய்து பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க நகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி 21–வது வார்டு ஏரி கடைக்கால் ரோட்டில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கழிப்பிடத்தின் குழாய்களை சிலர் உடைத்துவிட்டனர். மின் விளக்குகளையும் உடைத்துவிட்டனர். இதனால் பொதுமக்கள் கழிப்பிட வசதியின்றி தவிக்கின்றனர். எனவே இந்த கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சரி செய்திட வேண்டும். ஏரி கடைக்கால் ரோடு, தர்மக்கர்த்தா சந்து, நடுவீதி, மேற்கு வீதி ஆகிய பகுதிகளில் தெருவிளக்கு வசதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது விடுதலை களம் நிறுவனர் நாகராஜ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நகர செயலாளர் ராஜா முகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்